எதுவுமே செய்யாததற்கு எதற்கு குறைதீர் கூட்டம் விவசாயிகள் சரமாரி கேள்வி
தாம்பரம்: ஒவ்வொரு கூட்டத்திலும் மனு கொடுத்தும், இரண்டு ஆண்டுகளாக எதுவுமே செய்யாததற்கு ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என, தாம்பரம் கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினர். விவசாயிகளின் கேள்விக்கு பதில் கூற முடியாமல், அதிகாரிகள் முழித்தனர்.
தாம்பரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில், கோட்டாச்சியர் (பொறுப்பு) வெங்கடாச்சலம் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டம் குறித்து முறையாக தகவல் தெரிவிக்காததால், 12 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். காலை 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, 11:30 மணிக்கு தான் தொடங்கியது.
அதேபோல், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் வரவில்லை. ஏதோ பெயருக்காகவே விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்:
* வண்டலுார் ஊராட்சியில் பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பால் மாயமாகி விட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த பயனும் இல்லை; ஏன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்பதே தெரிய வில்லை.
★ திருநீர்மலை கோவில் நிலத்தை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என, ஒவ்வொரு முறையும், நாங்கள் மனு கொடுப்பதும், நீங்கள் வாங்குவதும் வாடிக்கையாவிட்டது. ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வருவதே இல்லை. ஒவ்வொரு முறையும் அடுத்த கூட்டத்திற்கு வருமாறு கூறுகிறோம் என்று கூறியே, காலத்தை கடத்தி வருகின்றனர். நாங்கள் விவசாயம் செய்ய வேண்டுமா; வேண்டாமா?
★ மாடம்பாக்கம் ஏரியில் உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விவசாயம் தடைபட்டுள்ளது. இதற்குமேல் இங்கு விவசாயம் செய்ய போகிறீர்களா என, விவசாயிகளை கேவலப்படுத்தும் விதத்தில் பேசுகின்றனர். கவுரிவாக்கம் ஏரி உடைப்பை சரிசெய்யுமாறு, 10 முறை மனு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு முறையும் நடக்கும், நடக்கும் என்கின்றனர். ஆனால், எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. ஏரிக்குள் கால்வாய் கட்டி கழிவுநீரை கலக்கும் மாநகராட்சி, உடைந்த கரையை சரிசெய்யாதது ஏன்?
இவ்வாறு அவர்கள் பேசினர்
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு