விவசாயிகளுக்கு மின்னணு பயன்பாடு பயிற்சி

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் மையம் சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், கொளக்குடி கிராமத்தில் விவசாயத்தில் மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் செல்வமூர்த்தி, உழவர் செயலி மற்றும் இ - வாடகை, 2.0 செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பதிவு செய்தல் குறித்தும், ட்ரோன் பயன்பாடு, மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

உதவி வேளாண் அலுவலர் சுவேதா, வேளாண் வணிகம் சார்ந்த திட்டங்கள், இ-நாம் செயலி, அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலாம்பிகை, மின்னணு செயலிகளின் முக்கியத்துவம், அவற்றின் மூலம் தரமான விதை பெறுவது, பயிர் மேலாண்மை, பாதுகாப்பு முறைகள் மற்றும், அக்ரி டெக் போர்டல், இணைய பயன்பாடு குறித்து விளக்கினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலநாதன், கார்த்திகா ஆகியோர் விவசாயிகளின் மொபைலில் தேவையான வேளாண் செயலிகளை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து கொடுத்தனர்.

கொளக்குடி கிராம விவசாயிகள் பலர் பயனடைந்தனர்.

Advertisement