தொடர் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே இடப்பிரச்னையில் பெண்ணை கொலை செய்ய முயன்றவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் கவுதம்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்யலட்சுமிக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்தது.இதன் காரணமாக கடந்த செப்.,14 ம் தேதி கவுதம், பாக்யலட்சுமியை கத்தியால் குத்தி, கொல்ல முயன்றார்.

அதனைத் தொடர்ந்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, கவுதமனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது வன்கொடுமை வழக்க நிலுவையில் உள்ளது.

இவரது தொடர் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று, கவுதமனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் சிறை அதிகாரிகளிடம் நடுவீரப்பட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமார்நேற்று வழங்கினார்.

Advertisement