கழிவுநீர் கலந்த குடிநீர் காவல் நிலையத்தில் விநியோகிக்கும் அவலம்

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதால், போலீசார் மற்றும் புகார் அளிக்க வருவோருக்கு, நோய் தொற்று அச்சம் நிலவுகிறது.

வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் -– ஒழுங்கு, குற்றப்பிரிவு, உதவி கமிஷனர் அலுவலகம், போக்குவரத்து உட்பட பல பிரிவுகள் செயல்படுகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்நிலையத்திற்கு குழாயில், சில நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் வருகிறது. இதனால், தொற்று நோய் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும், குடிநீர் வாரியம் அலட்சியமாக உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல் நிலையத்திலேயே, குடிநீரின் தரம் கேள்விக்குறியாகி இருப்பது, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement