வடவள்ளி – வீரகேரளம் சாலையில் வேகத்தடை வேண்டும்

1. கும்மிருட்டில் ஆர்.கே.கார்டன்





58வது வார்டு, ஆர்.கே.கார்டன் தெருவிளக்குகள் ஒரு மாதமாக எரியவில்லை. கார்டன் சார்ந்த பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரம்மத்துக்குள்ளகின்றனர்.

– மீனாட்சி சுந்தரம், ஒண்டிபுதுார்.

2. வெள்ளக்கிணறு சாலை மோசம்





வெள்ளக்கிணறு கரியகாளியம்மன் கோயில் எதிரில் உள்ள சாலை பல நாட்களாக சரி செய்யாமல் குண்டும் குழியுமாக உள்ளது. பல நேரங்களில் பாலம் இருப்பதை கவனிக்காமல் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளகின்றன.

– ராஜா, வெள்ளக்கிணறு.

3. வேகத்தடை வேண்டும்





வார்டு 40, வடவள்ளியில் இருந்து வீரகேரளம் செல்லும் சாலையில் வேகத்தடை இல்லாததால் தொடர் விபத்து ஏற்படுகிறது. வேகமாக இரு சக்கர வாகனங்கள் செல்வதால் வயதானவர்கள், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.

– அங்கப்பன், வடவள்ளி.

4. விளாங்குறிச்சியில் சட்டவிரோத செயல்





விளாங்குறிச்சி ஸ்ரீ கார்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் உயர் மின்னழுத்த மின்பாதைகளுக்கு கீழே தங்க வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர்வாசி ஒருவர் அங்கு வசிக்கும் மக்களிடம் நில வாடகையாக ரூ.10,000 பெறுகிறார்.

– பிரனவ் சைலேஷ், விளாங்குறிச்சி.

5. ரோடு ஆக்கிரமிப்பு





திருச்சி ரோடு, ஒண்டிபுதுார், பட்டணம் பிரிவு மெயின் ரோட்டில் பயன்படுத்த முடியாத பைக், ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.

– ரங்கசாமி, ஒண்டிப்புதுார்.

6. குப்பை குவியல்





கணுவாய் தடுப்பணை அருகே குவியல் குவியலாக குப்பை கொட்டப்படுகிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

– ஆறுமுகம், கணுவாய்.

7. அறுந்து விழுந்த இணைய கேபிள்





வடவள்ளி, பெரியார் நகர், 6வது வீதியில் தனியார் நிறுவன இன்டர்நெட் கேபிள்கள் அடுக்குமாடி குடியிருப்பின் முன் அறுந்து விழுந்து நீண்ட நாட்களாகிறது. விபத்துக்கு முன் சரி செய்ய வேண்டும்.

– சந்திரசேகர், வடவள்ளி.

Advertisement