சூரிய வீடு மின் திட்டம் விழிப்புணர்வு முகாம்

திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி, அன்னமயி அரங்கத்தில், அவிநாசி மின்வாரியக் கோட்டம் சார்பில் 'பிரதம மந்திரி சூரிய வீடு மின் திட்டம்' குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் (பொறுப்பு) மதனகோபால் தலைமையிலும், செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் முன்னிலையிலும் நடந்த இம்முகாமில், சூரிய மின்சக்தியின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், சூரிய மின்தகடுகள் நிறுவ வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து கனரா வங்கி மேலாளர் அரவிந்த் எடுத்துரைத்தார்.

இதில் சூரிய மின்சக்தி நிறுவுநர்கள், மின் நுகர்வோர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் வரவேற்க, உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

திருமுருகன்பூண்டியில் நடந்த 'பிரதம மந்திரி சூரிய வீடு மின் திட்டம்' குறித்த விழிப்புணர்வு முகாமில், மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் (பொறுப்பு) மதனகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement