சிவகாசி காரனேசன் விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
சிவகாசி: சிவகாசி காரனேசன் விலக்கில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.
சிவகாசி நகரின் நுழைவுப் பகுதியில் காரனேசன் விலக்கு உள்ளது. இங்கிருந்து சிவகாசி பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாண்ட், பஜார், சிறுகுளம் கண்மாய் ரோடு பிரிந்து செல்கின்றது. நகரின் நுழைவுப் பகுதி என்பதால் அனைத்து வாகனங்களும் இதனை கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும். அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இந்த ரோட்டில் தான் வந்து செல்கின்றனர். தவிர தற்போது தீபாவளி சீசன் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான கார்களில் பட்டாசு வாங்க மக்கள் வருகின்றனர். இந்நிலையில் காரனேசன் விலக்கில் டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மேலும் சைக்கிள், டூ வீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு