நகை திருட்டு வழக்கில் திருநங்கை உட்பட இருவர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் திருநங்கை உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் இந்திரா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா 27. இவரது அத்தை பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் செல்லும் போது வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மறைவில் வைத்து செல்வது வழக்கம். அதேபோல் செப். 15ல் வீட்டை பூட்டி சாவியை வைத்து விட்டு சென்றார். வேலை முடிந்து வந்து பார்க்கையில் பீரோவின் லாக்கரில் இருந்த இரண்டு பவுன் மதிப்பிலான செயின், மோதிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி 24, நகையை திருடியது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரிக்கையில் திருடிய நகைகளை மாரனேறி ஈஸ்வரன் காலனியை சேர்ந்த இலக்கியா 21, என்ற திருநங்கையிடம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement