இருபுறமும் ‘நம்பர் பிளேட்’ இல்லாத வாகனங்கள் பறிமுதல்

சென்னை: இருபுறமும் ‘நம்பர் பிளேட்’ இல்லாத வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்ய, போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னையில், சாலை விதிமீறல்களை கண்டறிய, முக்கிய சாலைகளில் நவீன கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் சிக்காமல் இருக்க சிலர், தங்களது வாகனங்களில் நம்பர் பிளேட்டை கழற்றி, பைக் ரேஸ் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் போலீசார், நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வந்தனர். விதிமுறைப்படி நம்பர் பிளேட் பொருத்திய பின்னரே, அந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்க இடமின்றி போலீசார் சிரமப்பட்டனர்.

வாகனத்தின் முன், பின் என, இருபுறமும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்யும்படி, போக்குவரத்து போலீசாருக்கு, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement