மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது
திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தோர், மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, 10 விருதுகள், உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச., 3ம் தேதி, முதல்வரால் வழங்கப்பட உள்ளது. விருதுடன், 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுகளுக்கு, tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, அன்று மாலைக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய நிறுவனங்களின் ரகசிய தகவல்களை திருடிய ஏஐ ஏஜென்ட்: விசாரணையில் அம்பலம்
-
நவ., 12 முதல் டிச., 11 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம்
-
கொளத்தூர் தவெக எம்எல்ஏ விரைவில் வீடு திரும்புவார்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்
-
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை
-
புதுச்சேரியில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுமாப்பிளை படுகொலை
-
மனைவி மாயம் கணவர் புகார்
Advertisement
Advertisement