அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
விழுப்புரம்: அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த அ.தி.மு.க., நகர செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் போலீசார் கடைவீதி கூட்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., நகர செயலாளர் காசிநாதன், 75; என்பவர் அனுமதியின்றி கட்சி டிஜிட்டல் பேனர் வைத்திருந்தது தெரியவந்தது.
வளவனுார் போலீசார் காசிநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement