திருக்கோவிலுாரின் கல்வி திருக்கோவில் எஸ்.எஸ்.கே., இன்டர்நேஷனல் ஸ்கூல்
கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் கோவிலாக சிக் ஷாகேந்திரா எனும் எஸ்.எஸ்.கே., இன்டர்நேஷனல் பள்ளி செயல்படுகிறது என பள்ளியின் செயலாளர் செந்தில் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த காற்றோட்டமான விஸ்தாரமான இட வசதியுடன் 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது சிக் ஷா கேந்திரா எனும் எஸ்.எஸ்.கே., இன்டர்நேஷனல் ஸ்கூல். சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் பயிற்று விக்கப்படுகிறது. நீட் ஜெ.இ.இ., உள்ளிட்ட உயர் படிப்பிற்கு கீழ் நிலையில் இருந்தே மாணவர்களை தயார்படுத்துகிறோம்.
கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதும் அவசியம். இதற்காக சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங், பரதநாட்டியம் என 40 விதமான கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவில் டெல்லியில் நடந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வகுப்பறை முழுவதும் ‘ஏசி.’ வசதி செய்யப்பட்டு, ரம்யமான சூழலில், படக் காட்சிகள் மூலம், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது.
கிராமப் பகுதி மாணவர்கள் தரமான உயர் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்திக் கொண்டுக்கப் பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசும் திறனை இயற்கையாகவே பெரும் சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதன் காரணமாக மாணவர்களின் உயர்கல்வி எளிதாக்கப்படுகிறது. சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், உயர் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், கல்லுாரியிலேயே வேலை வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தி சமுதாயத்தில் உயர் நிலையை பெற்று சிறந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கல்வி கோவிலாக சிக் ஷா கேந்திரா பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மிகை ஆகாது.
இவ்வாறு செந்தில் கூறினார்.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு