சிறுமி 7 மாத கர்ப்பம் தாய்மாமனுக்கு 'காப்பு'

ஓமலுார்: திருச்சி, தொட்டியத்தை சேர்ந்த, 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு படித்துள்ளார். அவர், சேலம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு, 2026 பிப்ரவரியில் தாயுடன் வந்தார். இரு வாரம் தங்கிய பின், திருச்சி சென்றனர்.

இந்நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட, பெற்றோர், அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் சிறுமி, 7 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது, சேலம் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற போது, தாய்மாமன் அத்துமீறியது தெரிந்தது. பெற்றோர் கடந்த, 13ல், சேலம் மாவட்டம், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

போலீசார் சிறுமியிடம் விசாரித்தபின், அவரது தாய்மாமனான, 23 வயதுடைய, விவசாய கூலித்தொழிலாளியை, 'போக்சோ' வழக்கில் நேற்று கைது செய்தனர்.

Advertisement