நவ., 12 முதல் டிச., 11 வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணி
சென்னை: ‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், நவம்பர் 12 முதல், டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்’ என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வரும் 2027 ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 2ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றம் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதைதொடர்ந்து, நவ., 12ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால், டிசம்பர் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த மனுக்கள் மீது, டிசம்பர் 28க்குள் தீர்வு காணப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல், 2027 ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும். பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை, அதற்குரிய படிவங்களை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி அலுவலர் அலுவலங்களில், அரசு வேலை நாட்களில் அளிக்கலாம். ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களிலும் அளிக்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், இருப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றிற்கான சான்றுகள் சமர்பிக்கப்பட வேண்டும். நேரில் மட்டுமின்றி, https://voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரி, ECINET என்ற மொபைல் போன் செயலி வாயிலாகவும், ஆன்லைன் முறையிலும் விண்ணப்பம் செய்யலாம்.
வரும் 2027 ஜனவரி 1ம் தேதி, ஏப்ரல் 1ம் தேதி, ஜூலை 1ம் தேதி, அக்டோபர் 1ம் தேதிகளில், 18 வயது பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு