ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவு
சென்னை: தமிழகம் முழுதும் வரும் 25 மற்றும் நவ., 1ம் தேதிகளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்கும்படி, காவல் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த அமைப்பின் மாநிலச் செயலர் ஜெகதீசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆர்.எஸ்.எஸ்., பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு, வரும் 19ம் தேதி, காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்; காலதாமதம் செய்யக் கூடாது. உயர் நீதிமன்ற விதிமுறைகளை கண்டிப்புடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பின்பற்ற வேண்டும்.
கடந்த 2022ம் ஆண்டு முதல், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி கோரிய வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளும், உயர் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளும் இருந்தபோதிலும், விக்கிரமாதித்தன் –- வேதாளம் கதை போல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எதிர்வரும் ஆண்டுகளில் பேரணி, பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்து, மீண்டும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நீதிமன்றத்தை நாடும் நிலையை, காவல் துறை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு