சென்ட்ரல் பூங்கா மூடப்பட்டதை எதிர்த்த வழக்கு அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

5

– சிறப்பு நிருபர் –: டில்லியில், கன்னாட் பிளேஸ் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் பேரணி அறிவித்ததை முன்னிட்டு, சென்ட்ரல் பூங்காவை மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ‘வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, திட்டவட்டமாக தெரிவித்தது.

தலைநகர் டில்லியில், உயர் பாதுகாப்பு பகுதியான ஜந்தர் மந்தர், போராட்டக் கள பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. அப்பகுதியில் தடையை மீறி போராட்டம் நடத்திய கரப்பான் கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில், அக்., 16 மாலை 5:00 மணிக்கு பேரணி நடத்தப்படும் என, கரப்பான் கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அக்., 16, 17ல் நிர்வாகக் காரணங்களுக்காக, கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க் மூடப்படுவதாக புதுடில்லி நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்த பேரணிக்கு போலீசாரும் அனுமதி மறுத்தனர்.

பூங்கா மூடப்பட்டதை எதிர்த்து, டில்லி கிரானா கமிட்டி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர், அவசரமாக விசாரிக்க அனுமதி மறுத்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது:

சிறு வியாபாரிகள் இந்த பண்டிகை நாட்களில் தான் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றனர். இந்த உத்தரவால், அவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளை நாங்கள் உணர்கிறோம். ஒருவர் போராட விரும்புகிறார்; இன்னொருவர், வேர்க்கடலை விற்க விரும்புகிறார். அதே சமயம், போலீசார் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க விரும்புகின்றனர்.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. ஒருவேளை வணிக நடவடிக்கைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டால், எங்களது அரசியல் சாசன அதிகார வரம்பை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்போம். நேரம் வரும் போது உரிய உத்தரவு பிறப்பிப்போம்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 26 அல்லது 27க்கு ஒத்தி வைத்தனர்.

@block_B@

அபிஜித் தீப்கே



தடுத்து நிறுத்தம்

டில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில், தடையை மீறி போராட்டம் நடத்த கரப்பான் கட்சி தலைவர் அபிஜித் தீப்கே நேற்று மாலை தன் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திய போலீசார், தடுப்புக் காவலில் வைத்தனர். அதே போல, ஜந்தர் மந்தர் அருகே போராட்டம் நடத்த முயன்ற ஏ.ஐ.எஸ்.ஏ., எனப்படும், அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா, 29, உள்ளிட்டோரையும் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.block_B

@block_B@

யார் இந்த நேஹா போரா?



உத்தரகண்டின் உதம் சிங் நகர் மாவட்டத்தின் கதிமா என்ற பகுதியைச் சேர்ந்த நேஹா போரா, ராணுவ குடும்ப பின்னணியை கொண்டவர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் அவர், இடதுசாரி மாணவர் அமைப்பான, ஏ.ஐ.எஸ்.ஐ.,யின் தலைவராகவும் உள்ளார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, ஜந்தர் மந்தரில் நடந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று, பல முறை கைது செய்யப்பட்ட அவர், பின் விடுவிக்கப்பட்டார்.block_B

Advertisement