குழந்தை பெற்றெடுத்த சிறுமி வாலிபர் உட்பட மூவர் மீது வழக்கு
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, சிறுமியை திருமணம் செய்து குழந்தை கொடுத்த வாலிபர் உட்பட, 3 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 28, கட்டட தொழிலாளி; இவர், தந்தையை இழந்து தாயின் பராமரிப்பில் வளர்ந்த, 14 வயது சிறுமியை, 6 மாதங்களாக காதலித்து, கடந்தாண்டு செப்., 25ம் தேதி, வஜ்ரபள்ளத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் கர்ப்பமடைந்த சிறுமி, கடந்த, 7ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
அப்போது தான், சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டதும், அதன் மூலமாக அவர் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்ததும், டாக்டர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியிடம் நேற்று முன்தினம் போலீசார் புகார் பெற்றனர்.
அதன்படி, சிறுமியை திருமணம் செய்த ராஜேந்திரன், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், ராஜேந்திரன் தாய் எர்ரம்மா, 60, ஆகிய மூன்று பேர் மீது, போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
-
ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வியை வழங்கும்பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
-
ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது
-
மாணவர்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்; இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
புரிந்துணர்வு ஒப்பந்தம்