ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வியை வழங்கும்பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

பண்ருட்டி லட்சுமிபதி நகரில் இயங்கி வரும் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 2009ல் நிறுவனர் மாயகிருஷ்ணன் அவர்களால் துவங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரவி, பள்ளி இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் சீரிய முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் 220 மாணவ, மாணவிகளுடன் துவங்கிய நிலையில், அடுத்த ஆண்டே மாணவர்களின் எண்ணிக்கை 500யை கடந்தது.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டு உள்ளிட்ட அனைத்து தனித்திறன்களிலும் தனிகவனம் செலுததப்பட்டு வருகிறது.

கற்பித்தலில் புதுமைகளை தருவதில், இப்பள்ளி முதன்மையாக திகழ்கிறது. கடந்த 2012ல் அனைத்து வகுப்பறைகளும் டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றப்பட்ட முதல் பள்ளியாகும்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகளை அன்றைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு திறந்து வைத்தார். அதே ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2012ல் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 2014–2015ல் 1000 மாணவர்களை கடந்து சிறந்து விளங்கி வருகிறது.

இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்வியோடு மட்டுமன்றி, விளையாட்டிலும், மாவட்ட மறஅறம் மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

பள்ளியில் விளையாட்டு விழா, மழலையர் தினவிழா, சாதனையாளர்கள் தினவிழா, ஆண்டுவிழா, சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இங்கு மல்லர் கம்பம், சிலம்பம், யோகா, கராத்தே பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

உலகத்தரம் வாய்ந்த இறகுபந்து உள்விளையாட்டரங்கம் மூலம் பயிற்சி வழங்குகின்றனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட, வட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மடிக்கணிணி இலவசமாக வழங்கி, விருது, ஊக்கதொகை வழங்கி கவுரவிக்கப்படுத்தப்படுகிறது.

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தேசிய கல்வி தரத்துடன் லீட் ஸ்கூல் அகாடமியுடன் இணைந்து சி.பி.எஸ்.இ., தரத்துடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நவீன தொழில்நுட்பத்துடன் கல்வி கற்பிக்கப்படுகிறது. நீட், ஜெ.இ.இ., போன்ற தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

கல்வி ஒன்று தான் படைப்பாற்றலையும், சிந்தனையும் வளர்க்கும் என்கிற ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நோக்கத்துடன் துவங்கியதே இப்பள்ளி. ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வியை வழங்குவதில் இப்பள்ளி சிறந்து விளங்கி வருகிறது.

Advertisement