கட்சியை விட்டு விலகிய துரோகிகள் ராகுலின் நண்பர்கள் : கார்கே பதிலால் பரபரப்பு
புதுடில்லி: காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகளை, ''கோழைகள், துரோகிகள்,'' என, அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்த போது, அருகே இருந்த கட்சியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ''அவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் தானே,'' என, சட்டென முகத்தில் அடித்தாற் போல கூறியது கட்சிக்குள் பேசு பொருளாகி உள்ளது.
டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகமான இந்திரா பவனில், கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தேநீர் விருந்து அளித்தார். இதில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இளம் நிர்வாகிகளிடையே பேசிய ராகுல், ''காங்., தொண்டர்கள் சிங்கத்தை போன்றவர்கள். அவர்கள் எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும், பொய் வழக்குகளுக்கும் அஞ்சுவதில்லை. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து போராடி வருபவர்கள் தான், உண்மையான காங்., வீரர்கள்,'' என்றார்.
''அரசியல் அழுத்தங்களுக்கு பயந்தோ அல்லது தங்களின் சுயநல பேராசையாலோ கட்சியை விட்டு ஓடியவர்கள் துரோகிகள், கோழைகள்,'' எனக் குறிப்பிட்ட ராகுல், காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் நிர்வாகிகளான ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.பி.என்.சிங், ஜிதின் பிரசாதா ஆகியோரை மறைமுகமாக சாடினார்.
இவர்களில், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா ஆகியோர் தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ராகுல் இவ்வாறு கூறியதும், சட்டெனக் குறுக்கிட்ட கார்கே, சிரித்தபடி, ''ஆனால், கட்சியை விட்டு விலகியவர்கள் எல்லாரும் உங்கள் நண்பர்கள் தானே,'' என, சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ராகுல், ''அவர்களை நண்பர்களாக அடையாளம் காண்பதில் தவறு செய்துவிட்டேன்,'' என்றார். ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா உள்ளிட்டோரை ராகுல் சாடிய போது, கார்கே குறுக்கிட்டு குத்திக் காட்டியது, காங்கிரசில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
காங்கிரஸ் என்றால் கொம்பா முளைத்து இருக்கிறது?
மன்மோகன் சிங் அவர்களையே அடிமை போல நடத்தியது இதில் கார்கே என்ன மூலைக்கு சமம்?
ஐயோ பாவம் இனி பிளாஸ்டிக் chair ரும் கிடைக்காது...... மண்ணை வாரி தன் தலையிலேயே போட்டு கொண்டார் இந்த அடிமை
அசாம் முதல்வரின் பெயரை மறந்து விட்டார்.
கார்கே பதவி காலி
பெரிசுக்கு புத்தி, ரோசம் வந்துருச்சு .... பிச்சுக்க போவுதா அல்லது கூட இருந்து கழுத்தறுக்கப்போவுதா தெரியல .... பாஜகவின் சா நக்கியர் இப்போ வலைவீசிப் பார்க்கலாம் .....
மொதலாளியையே துரோகி என்று வர்ணிக்கும் கார்கேவின் பதவி அடுத்த தரமான அடிமையை அடையாளம் காணும் வரை மட்டுமே தொடரும்.
சிவகுமார், கார்கே போன்றோர் காங்கிரசில் இருந்து விலக வாய்ப்பு இருக்கிறது
அவர்கள் உங்களை பற்றி புரிந்ததினால்தான் விலகினர். நீங்கள் இப்படியே பேசி காங்கிரஸை அழித்து விடுவீர்கள்
காங்கிரஸில் இருந்து விலகி ஓடிய கோழைகள், துரோகிகளில் ராகுல்காந்தி மிச்சம் இருக்கிறார் என்று கார்க்கே சொல்லி விட்டார்