குடியிருப்போர் சங்கம் கோரிக்கை மனு
கடலுார்: நத்தப்பட்டு ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென, குடியிருப்போர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுகுறித்து கடலுாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியனிடம், நத்தப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகர், கிருஷ்ணசாமி நகர், முத்தையா நகர் குடியிருப்பு நலச்சங்க தலைவர் விஷ்ணு தாசன், செயலாளர் சிங்காரம், பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் ராம்தாஸ், இணை செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மனு அளித்தனர். மனுவில், ‘பத்மாவதி நகர், கிருஷ்ணசாமி நகர், முத்தையா நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மின் விளக்கு கம்பங்கள் அமைக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement