ஒயிட் டவுன் தெருக்கள் முழுதும் சுற்றுலா பயணிகளின் கார்கள்

புதுச்சேரி: புதுச்சேரியின் அழகிய கடற்கரை, பிரெஞ்சு கால கட்டட கலையின் அழகை ரசிக்க நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, நேற்று முதல் புதுச்சேரி நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை ரசித்துவிட்டு, ஒயிட் டவுன் தெருக்களில் கட்டப்பட்டுள்ள பழமையான பிரெஞ்சு கால கட்டடத்தின் முன்பு நின்று போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

இதனால் போலீஸ் தலைமையகம் அமைந்துள்ள துாய்மா வீதி, ரோமண்ட் ரோலண்ட் வீதி, சுய்ப்ரேன் வீதி, விக்டோர் சிமோனல் வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப போதிய அளவில் பார்க்கிங் வசதிகள் இல்லாததால், ஒயிட் டவுன் தெருக்கள் முழுதும் சுற்றுலா பயணிகள் கார்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement