நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மும்பை: மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் 23ல், சட்ட மேல்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கிறது.
பிரசாரத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ஒரு சிலர் ஒரு ரூபாய்க்கு மதிப்புள்ள பணிகளை முடித்து, 10 ரூபாய் மதிப்புக்கு அதற்காக விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். ஆனால் நாம், 10 ரூபாய் மதிப்புக்கு பணிகளை செய்திருந்தாலும், ஒரு ரூபாய் மதிப்புக்கு கூட மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்வதில்லை. இது தான், பா.ஜ.,வினருக்கு இருக்கும் மிகப்பெரிய பலவீனம்.
இனி அப்படி இருக்கக் கூடாது. நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம். அரசு அமல்படுத்திய நலத்திட்டங்கள், செய்து முடித்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பா.ஜ., தொண்டர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.