பஞ்சவடீ கோவிலுக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கல்
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ரூ.2 லட்சம் மதிப்பில், சுத்தம் செய்யும் கருவி வழங்கப்பட்டது.
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய இந்தியன் வங்கியின் வானுார் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கிளயைின் சார்பில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சம் மதிப்பில், நவீன சுத்தம் செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டது.
அந்த இயந்திரம் கோவில் நிர்வாகத்திடம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்தியன் வங்கியின், புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கிளை மேலாளர் மனோஜ்குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கோவில் செயலாளர் பழனியப்பன், டிரஸ்டி செல்வம் ஆகியோரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement