கேமராக்கள் அமைக்க சர்வே

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், எஸ்.ஆர்.வி. நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களை முற்றிலும் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் அப்பகுதிகளில் 2 நாட்களாக கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான இடங்களை போலீசார் சர்வே செய்து வருகின்றனர்.

Advertisement