தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு

1

சென்னை: சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 13,535 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரம்

நேற்று (அக்டோபர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனைஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய நிலவரம்

இன்று (அக் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 230 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சிறப்பு வீடியோ!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை; ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா; வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

இங்கே கிளிக் செய்யவும்

Advertisement