முதல்வர் பிரசாரத்திற்கு இடையூறு: 3 பேர் கைது
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க., வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்ட போது, அதே வழியில், நா.த.க., வேட்பாளர் கார்த்திகா உட்பட கட்சியினர் பிரசாரம் செய்ய சென்றனர்.
வேறு வழியில் பிரசாரம் செய்ய போலீசார் அறிவுறுத்திய போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்து, மறியலில் ஈடுபட்டனர். கார்த்திகா உள்ளிட்டோர் மீது தாராபுரம் போலீசார் ஐந்து வழக்குகள் பதிந்தனர்.
நேற்று முன்தினம் கோவையில் கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில், நேற்று, கோவை நேதாஜிபுரத்தை சேர்ந்த மோகன் பிரசாத், 32, காரைக்காலை சேர்ந்த வெங்கடேசன், 52 சென்னையை சேர்ந்த கோகுல், 29 என, மூன்று பேரை கைது செய்தனர். மேலும், சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement