விவசாய சங்கம் மறியல்
சிவகங்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திட வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் விவசாய சங்க உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வீரபாண்டி, காமராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், கோபால் முன்னிலை வகித்தனர். தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. வேங்கையா, ரவி, வீரணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 20 பேரை கைது செய்தனர்.