கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்

கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கிருஷ்ணாலயா தியேட்டர் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் பிரபா டெக்ஸ் திறப்பு விழா இன்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதிய கடையின் வடக்கு பிரிவினை திறந்து வைத்தார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார் குழந்தைகள் மற்றும் ஆண்கள் பிரிவுகளையும், இந்தியன் வங்கியின் பொது மேலாளர் பத்மாவதி பட்டு புடவைகள் பிரிவையும் திறந்து வைத்தனர்.

விழாவில் ராமலிங்கம், சரஸ்வதி, முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், ஆனந்தபவன் குரூப்ஸ் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன், சாய் பிரசாத், ராஜ யோககுமார், தி.மு.க. பகுதி செயலாளர் வெங்கடேஷ், பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், டாக்டர் நடராஜ், தேவி ேஹாட்டல் முருகன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தனசேகர், பஸ் உரிமையாளர்கள் டாக்டர் சதீஷ்குமார், யுவராஜ், துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மண்டல செயலாளர் கண்ணன், அ.தி.மு.க வரதராஜன், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்தர் அலி, ம.தி.மு.க., ராமலிங்கம், தினேஷ், பா.ம.க., மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன்,இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ்,கோகுல் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று கூறியதாவது:

கடலூரில் பிரமாண்டமாக பிரபா டெக்ஸ் திறப்பு விழா நடந்தது. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஆடைகள் உள்ளன. மேலும் திறப்பு விழாவில் 75 ரூபாய்க்கு புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றது புதிய டிசைன் ஆடைகள் பிரத்யோகமான டிசைன் ஆடைகள் தரமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றது. அனைத்து ஆடைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அனைவரும் பெருமளவில் பயனடைவார்கள். இது மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட அனைத்து விழாவிற்கும் பிரத்தியேகமான முறையில் ஆடைகள் வி ற்பனை செய்யப்படுகின்றது. பிரபா டெக்ஸ் வளாகத்தில் அனைவரும் எளிமையாக சென்று வருவதற்கு லிப்ட் வசதி மற்றும் குளிர் சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறைந்த விலையிலும் தரமான ஆடைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது எங்களது நோக்கமாக கருதி அதனை செயல்படுத்தி வருகிறோம்.

தற்போது தீபாவளி உள்ளிட்ட விழா காலங்கள் தொடங்க உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு தேவையான ஆடைகளை குடும்பங்களாக வந்து வாங்கி பயன்பெறலாம். ஆகையால் உங்களின் நல் ஆதரவை தொடர்ந்து வழங்கி வரவேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம் என்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே.குழுமம், சி.ஓ.ஓ., விக்னேஷ், பைனான்ஸ் அதிகாரி அரவிந்த் சூர்யா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement