மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையை சேர்ந்தவர் தண்டபாணி மகன் முருகன், 36; அதே ஊரில் பஸ் நிலையம் எதிரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று இரவு 9:00 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை கடையை திறந்தது போது , கடையின் தகரக் ஷீட்டை உடைத்து கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 62,000 மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்றனர்.
புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சி.சி. டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த 14 வயதுடைய இருவர் திருடியதை அறிந்து இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement