பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர்கள்?
ஈரோடு: பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பாக, இரு முன்னாள் அமைச்சர்கள் களமிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வென்ற எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால் பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கும், இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த, தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில், ஏற்கனவே அ.தி.மு.க.,வில் வென்று, த.வெ.க.,வுக்கு வந்தவர்களை நிறுத்தியதால், ஆளுங்கட்சியான த.வெ.க., கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருந்தது. இதுபோல, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலிலும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, பெருந்துறையை சேர்ந்த அரசியல் கட்சியினர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் வென்று, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்த ஜெயக்குமார், த.வெ.க., சார்பாக போட்டியிட வாய்ப்பு அதிகம். சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பாக போட்டியிட்டு தோற்ற, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தற்போது, அக்கட்சியில் இருந்து விலகி விட்டார். அவரை அ.தி.மு.க.,வில் இணைத்து, அக்கட்சி சார்பாக களமிறக்க, பேச்சு நடக்கிறது.
தி.மு.க., சார்பில் போட்டியிட, பெருந்துறை தொகுதியில் பலமான ஆள் இல்லை. எனவே, மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் முத்துசாமி களமிறங்குவார். இவர், கடந்த சட்டசபை தேர்தலில், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தி.மு.க.,வில் முத்துசாமி, அ.தி.மு.க.,வில் தோப்பு வெங்கடாசலம் என இரு முன்னாள் அமைச்சர்கள் களமிறங்கினால், கடும் போட்டியை த.வெ.க., எதிர்கொள்ளும். அதனால், அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், தேர்தல் பணிகளை, த.வெ.க., மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னாள் அமைச்சர்கள் களமிறங்கும் நடவடிக்கை, திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் இன்னமும் பணபலத்தை நம்பியே உள்ளனர் என்பதை உணர்த்துகிறது. ஓரு ஓட்டுக்கு 10000 ரூபாய் வரை கொடுத்து ஆப்பு வாங்கியும் இவர்களுக்கு அறிவு வரவில்லையே.மேலும்
-
தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
கணவனுக்கு வீரவணக்கம் செலுத்திய மனைவியால் போலீசார் நெகிழ்ச்சி
-
இறக்கும் தருவாயிலும் பயணியர் உயிரை காப்பாற்றிய டிரைவர்: 86 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
-
குமரியில் ரயில்தடம் புரண்டு விபத்து; ரயில்சேவை பாதிப்பு
-
அமெரிக்கா தலைமையில் முத்தரப்பு பேச்சு: புடின், ஜெலென்ஸ்கி சம்மதம்
-
திருநெல்வேலியில் அதிக மழைப்பொழிவு எங்கு தெரியுமா?