ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவை இருட்டடிப்பு செய்யாமல், தஞ்சையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தவெக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை; நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறனில் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட, 2022ம் ஆண்டு திமுக அறிவிப்பை வெளியிட்டது. 1041வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினர் அறிந்திட, தஞ்சை தமிழ்ப் பல்கலை வளாகத்தில் ரூ.56 கோடியில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திமுக ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!
பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் தவெக அரசு குறுகிய பார்வையுடன் ரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம். ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 1000 ஆண்டுகளுக்குப்பிறகு, திமுக கருணாநிதி பரம்பரையும் இது போல் புகழ்ந்து போற்றப்படும். அன்றைக்கு யார் இருப்பார்களோ திமுக புகழ்களை இப்பொழுதிலிருந்தே கல்பாறைகளில் செதுக்கி வைக்க வேண்டும். அவை தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும். ஏனெனில் அவைகளுக்கு வெர்ஷன் அப்டேட் கிடையாது. கிளவுட் சர்வரில் வைத்தால் காணாமல் போய் விடும்.
தயவு செய்து மீடியாக்கு வர வேண்டாம் .நீங்க ராஜராஜசோழன் மேல வச்சுருக்கிற அக்கறை எல்லாத்துக்கும் புரியுது. இந்த அரசாங்கம் பார்த்துக்கும், ரொம்ப சிறப்பா நடக்கும்.
புரியுதா ? ? கண்டிப்பா இருட்டடிப்பு செய்யணும் - - - அதான் முன்னாடியே சொல்றாரு - - -
ஏன்னு புரியூதா ? , ராஜா ராஜா சோழன் , கரிகால் சோழன் , போன்ற சோழ மன்னர்கள் , பாண்டிய மன்னர்கள் - பல்லவ மன்னர்கள் - அவர்கள் சுத்த தமிழ் மன்னர் - அதோடு அவர்கள் எல்லாம் கோவில்கள் கட்டிய ஹிந்துக்கள் - அதெல்லாம் திருட்டு திராவிட மாடலுக்கு ஆகாது - - - திருமலை நாய்க்கர் - கட்டபொம்மன் , பெரியா நாய்க்கர் , இவங்களைதான் வெளிச்சம் போட்டு வைக்கணும் . . . .
அதெல்லாம் காரணம் இல்லை. கட்டுமரம் குடும்பத்தினர் தங்களை தஞ்சை மன்னர் பரம்பரையினர் என்று ஒரு காலத்தில் புளுகிக் கொண்டு திரிந்தனர்.