கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளக்கனேந்தல் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. மண்டல இணை இயக்குநர் அரசு தலைமை வகித்தார். உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி, கால்நடை டாக்டர் மதி, முன்னிலை வகித்தனர். உதவி டாக்டர்கள் கவுதம், ரெங்கசாமி கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல்,குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர். முகாமில் 839 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். ஆய்வாளர் பாஸ்கரன்,உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement