கோவை நீலகிரியில் கடந்த ஆண்டை விட அதிக மழை

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில், எதிர்பார்த்த மழையளவை விட அதிகம் பெய்துள்ளதாக, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

‘‘ தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அக். 30 வரை கனமமழைக்கு வாய்ப்பு உள்ளது. இம்மாதத்தில் 186 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இப்போது வரை 215 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மாத இறுதிக்குள், 300 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும், ’’ என்கிறார் மையம் தலைவர் சுந்தரமூர்த்தி.

Advertisement