செங்கடலில் கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல்; இந்தியர்கள் 14 பேர் பத்திரமாக மீட்பு

1

-நமது நிருபர்-
செங்கடல் பகுதியில் இந்திய சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியப் படைகள் குறிவைத்துத் தாக்கியதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கப்பலில் இருந்த 14 இந்தியர்களையும் ஹவுதி படை மீட்டுள்ளனர்; அவர்கள் குறித்த முழுமையான தகவல் பின்னர் வெளியிடப்படும் என ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீ தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது; இதற்கு எதிராக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சவுதி அரேபியாவின் தம்மாம் நகரத்தில் உள்ள கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

@block_Y@

ஏற்றுக்கொள்ள முடியாதது!



ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தொடர் தாக்குதல்களை இந்தியா கண்டித்ததோடு, சவுதி அரேபியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து உள்ளது. மேற்கு ஆசியாவில் அமைதியும் இயல்பு நிலையும் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும். மக்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்திய விமான நிறுவனங்கள் விமான சேவைகளை நிறுத்தியதால் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய யாத்ரீகர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கு வசதி செய்வதற்காக, விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.block_Y

Advertisement