24 பேட்டரிகள் திருட்டு மேலும் ஒருவர் கைது

பொங்கலுார்: பல்லடம், வி.கள்ளிபாளையத்தில் கடந்த ஆக. 2-ம் தேதி மொபைல் போன் டவர் அறையில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகளை சிலர் திருடி சென்றனர். இது தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில் சத்தியானந்த், 33, ரஞ்சித்குமார், 32, தினேஷ்குமார், 29, பாலகிருஷ்ணன், 30 என நான்கு பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்தனர். நேற்று மணிகண்டன், 32 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement