திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
மும்பை:
மஹாராஷ்டிராவில் சமீபத்தில், 'மஹாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் - 2026' நடைமுறைக்கு வந்தது. இது, கட்டாயப்படுத்துதல், மோசடி, வற்புறுத்தல், துாண்டுதல், தவறான சித்தரிப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை குற்றமாக கருதுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன் படி, மதம் மாறும் முன் தனிநபர்கள், 60 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில், தானேவைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர், இச்சட்டத்தை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி.திரிபாதி, நீதிபதி அத்வைத் சேத்னா விசாரித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தச் சட்டம், அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தை பரப்புவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்தச் சட்டம், சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், கட்டாயப்படுத்துதல் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை தடுக்கவும் கொண்டு வரப்பட்டது.
'எவருக்கும், தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. ஆனால், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது' என,
சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, மனு திரும்ப பெறப்பட்டது.
"......ஆனால், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது...." சோ, திருமணம் என்ற ஒற்றைக் காரணம் மட்டும் போதாது. திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ளுதல், தலாக் போன்று பல காரணங்கள் ஓக்கேதானே யுவர் ஹானர்?
மதம் மாற ஒருவருக்கு முழு அளவு சுதந்திரம் வேண்டும். ஆனால் மத போதனை என்ற பெயரில் ஆள் பிடிக்கும் கூட்டத்தை தடை செய்ய வேண்டும். திருமணத்துக்காக மதம் மாறுவது பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை தடை செய்வது பெருமளவிலான மதமாற்றத்தை தடுக்கும். பெண்ணுக்காகவும், வேலைக்காகவும், பணத்துக்காகவும் மதம் மாற்றுவது தடை படும்.
அமைதி மார்க்கத்தினர் எப்போதுமே கலப்பு மதத் திருமணத்தில் வேற்று மதத்தினரை தங்கள் மதத்திற்கு மாறுமாறு செய்துவிடுவார்கள்.
மதம் மாறியவர்களுக்கு சலுகைகள் கொடுப்பதை தடை செய்ய வேண்டும்
அரசின் இலவசங்கள், அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்களை வாங்க, மதம் மாறுவதையும் அனுமதிக்க கூடாது.
சில கிறிஸ்தவ சபைகளில் மாற்று மதத்தினர் கிறிஸ்தவர்களை மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறார்கள். ஆனால் 2 சத்திய கண்டிஷன்கள் 1. கிறிஸ்தவராக உள்ள மணமகன் கடைசிவரை கிறிஸ்தவராகவே இருக்க வேண்டும். 2. பிறக்கும் பிள்ளைகளையும் கிறிஸ்தவர்களாகவே வளர்ப்பேன் எனவும் சத்தியம் செய்ய வேண்டும்.