சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? திமுகவை விளாசிய அமைச்சர் அருண்ராஜ்

-நமது நிருபர்-

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ஐ.நா., சபையின் குழந்தைகள் நிதியமான, 'யுனிசெப்' அமைப்புடன் இணைந்து, குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கை, சென்னையில் நடத்தியது. அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வின் படி, மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை, 14.6ல் இருந்து, 13.4 சதவீதமாக குறைந்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 20 சதவீதம் குழந்தைகள், வளர்ச்சி குறைபாடுள்ளவர்களாக உள்ளனர்.

ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, சுகாதார மேம்பாடு, குழந்தைகளின் வளர்ச்சி குறித்த தரவுகளை ஆய்வு செய்து, சிறப்பு சிகிச்சை முறைகளை உருவாக்க, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

பிறந்த குழந்தைகளுக்கு கட்டாயப் பரிசோதனை, 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அளிப்பதன் அவசியம், மனவளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக, முதல் 1,000 நாட்களில் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து, குறைபாடுகளை 18 மாதங்களிலேயே கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிருபர்கள் சந்திப்பில் தவெக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற உதயநிதியின் புகார் குறித்த கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார். சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? என உதயநிதி குற்றச்சாட்டுக்கு அமைச்சரின் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement