காங்கிரஸ் இல்லாமல் திமுக கரை சேர முடியாது; சொல்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்
- நமது நிருபர்-
சிதம்பரத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதே கருத்தை 2004ம் ஆண்டிலேயே தெரிவித்திருந்தால், திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்க முடியாது. அத்தனை பார்லிமென்ட் எம்பிக்களை பெற்றிருக்க முடியாது.
2009ம் ஆண்டிலும் இதே நிலை ஏற்பட்டிருக்கும். காங்கிரசுக்கு அரசியல் கற்றுத் தர திமுக பெரிய கட்சி கிடையாது. காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் இனி ஆட்சிக்கு வர முடியாது. அது ஸ்டாலினுக்கும் தெரியும்.
அப்படியிருக்க, அவர் ஏன் அடிக்கடி இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி 143 ஆண்டுகால வரலாறு உள்ளது. திமுகவைப் போன்று 30, 40 அல்லது 60 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட கட்சி அல்ல. இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
வாசகர் கருத்து (2)
சத்திய சோதனை - ,இந்தியா
23 அக்,2026 - 03:43 Report Abuse
செத்துப்போன இத்துப்போன கட்சி கான் கிராஸ் ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு 9 பொண்டாட்டி கேக்குதாம் இப்படியே பேசி பேசி கடைசியில் லெட்டர் பேடு கட்சி ஆகி நாசமா போக வாழ்த்துக்கள் கான் கிராஸ் என்றுமே உருப்பட்டதும் கிடையாது கூட இருப்பவனை உருப்படவும் விடாது இது ஒரு கோவிட் கிருமி கட்சி 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 அக்,2026 - 22:55 Report Abuse
காங்கிரஸ் கட்சியே நடுக்கடலில் தள்ளாடுகிறது. பிறகு எப்படி திமுக, காங்கிரஸ் கட்சியை பிடித்து கரை சேர முடியும்? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement