பள்ளி மாணவர் தற்கொலை கோவை கமிஷனருக்கு நோட்டீஸ்

சென்னை: 'கோவையில் பட்டியலின பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, கோவை போலீஸ் கமிஷனருக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆணையத்தின் பொறுப்பு தலைவர் இமையம், உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில், மாணவர் பிளஸ் 1 படித்து வந்தார்.

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சக மாணவர்கள் அவருடன் பேச மறுத்து ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவரிடம் ஜாதிய கண்ணோட்டத்துடன் பேசி, வம்பு இழுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், நேற்று முன்தினம் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, ஒரு வாரத்திற்குள், கோவை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் உள்ளது.


@block_G@

சஸ்பென்ட்



மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகிய இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்தார். ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட உத்தரவை பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அதிகாரி கோமதிக்கு அனுப்பி வைத்தது.block_G

Advertisement