பண்ருட்டி கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பட்டா மாறுதலுக்கு கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே வருவாய் கிராம உதவியாளர் ஒருவருக்கு, பண்ருட்டி – கும்பகோணம் சாலை ஆர்ச் கேட் அருகில் ஒருவர் லஞ்சம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், லஞ்சம் கொடுக்கும் நபரிடம், கிராம உதவியாளர், பணம் எவ்வளவு உள்ளது என்கிறார். அதற்கு அவர், ரூ.3,000 உள்ளது என்றதும், மீதமுள்ள ரூ.1,000 கொடுத்துவிடு என கூறுகிறார்.உடன் அந்த நபர், நான் ஏற்கனவே ரூ. 2,000 கொடுத்துள்ளேன். தற்போது ரூ.3,000 கொடுத்துள்ளேன். மீதி தருகிறேன். அதுக்கு ஏன் கூடுதலாக என கேட்கிறார். அதே வீடியோவில், பணம் கொடுப்பவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது, பண்ருட்டி வருவாய் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.