பைக் – வேன் மோதல் : தாய், குழந்தை சாவு

1

தேனி: முத்துதேவன்பட்டி அருகே, மினி வேன் – பைக் மோதிய விபத்தில் ஷகிலா 25, மற்றும் அவரது, ஒரு வயது பெண் குழந்தை சண்முகி ஆகியோர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் மனோஜ், 45. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷகிலா. இருவரும் தங்கள், ஒரு வயது பெண் குழந்தை சண்முகியுடன் தேனிக்கு பைக்கில் சென்று விட்டு, மீண்டும் தேவாரம் நோக்கி, நேற்று மதியம் வந்து கொண்டிருந்தனர்.

முத்துதேவன்பட்டி பைபாஸ் சாலையில், 3:00 மணியளவில் வந்தபோது, எதிரே தேனி நோக்கி சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஷகிலா, குழந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த மனோஜ், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement