அமெரிக்காவில் தீபாவளிக்காக சிறப்பு தபால்தலை வெளியீடு
வாஷிங்டன்: அமெரிக்க தபால் துறை நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, தபால்தலை ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலைஞர் சங்கீதா புதடாவின் கைவண்ணத்தில் உருவாக்கிய நுணுக்கமான ரங்கோலி, இந்த தபால்தலையில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவை பூர்விகமாக கொண்ட சங்கீதா புதடா நீண்டகாலமாக ஹூஸ்டனில் வசித்து வருகிறார். கடந்த, 30 ஆண்டுகளாக அவர் தொன்மையான ரங்கோலியை வரைந்து வருகிறார். தீபாவளி தபால் தலைக்கான ரங்கோலி வடிவத்தை சங்கீதா வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த தபால்தலை வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.
அமெரிக்க தபால் துறை, தீபாவளிக்காக தபால் தலை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். முதன்முதலில் 2016ல் இத்தகைய தபால்தலை வெளியிடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement