குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

2

ஆதம்பாக்கம்: இரு குழந்தைகளுடன் மாயமான மனைவியை, கண்டுபிடித்து தரும்படி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 25; கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி நிவேதிதா, 24. இவரும், காதலித்து ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு, 4, 2 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. நிவேதிதாவின் பாட்டி மல்லிகா, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதால், எட்டு மாதங்களாக நிவேதிதா குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார்.

அப்போது நிவேதிதா, வேளச்சேரியில் உள்ள ஜூஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 14ம் தேதி குழந்தைகளுடன் காஞ்சிபுரம் செல்வதாக கூறி சென்ற நிவேதிதா வீடு திரும்பவில்லை.

உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி சந்தோஷ் புகார் செய்தார்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement