சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; அக்.31 வரை இண்டிகோ விமான சேவை ரத்து
புதுடில்லி: சவுதி அரேபியாவில் விமான சேவை அக்டோபர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சவுதி ரியாத் விமான நிலையம் அருகில் அண்மையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். நிலைமை சமூகமாக இல்லாத நிலை எழுந்ததால் சவுதி அரேபியாவில் விமான சேவைகளையும் ரத்து செய்து இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்து இருந்தது.
தற்போது அங்கு பதற்றமான சூழல் நீடிப்பதால் ரியாத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை விமான சேவைகளை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவன அறிவிப்பின் விவரம்;
பாதுகாப்புச்சூழல் குறித்து அங்குள்ள நிலைமையை கவனமாக ஆய்வு செய்தோம். ரியாத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் இண்டிகோ விமான சேவைகள் அக்டோபர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
ஜெட்டா, தம்மாம், மதீனா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகள் அக்டோபர் 27 வரை ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.
அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமான நிலையம் செல்லும் முன்பு https://goindigo.in/check-flight-status என்ற இணையதளத்தில் தாங்கள் செல்லும் விமானத்தின் தற்போதைய நிலையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து