பி.எப்.சந்தாதாரர்களின் குறைகள் தீர்க்க வரும் 27ல் கூட்டம்

கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும், 27ம் தேதி குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டம், பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லுாரியிலும், நீலகிரி மாவட்டம் குன்னுார் கிளப் ரோடு, பெட்போர்ட் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும் நடக்கிறது.

கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை நேரில் முறையிடலாம்.

சந்தாதாரர்கள் யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, ro.coimbatore@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், benefit---–srokovai@esic.nic.in இ–மெயில் வாயிலாகவும் பகிர்ந்து கொள்ளலாம்.

கூட்டத்தில் பங்கேற்க முடியாத உறுப்பினர்கள், அனைத்து வேலை நாட்களிலும் கோவை மண்டல அலுவலகம், பொள்ளாச்சி, ஊட்டி, குன்னுாரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று பார்க்கலாம்.

இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement