பறவைக்காய்ச்சல் அறிகுறி நமது மாவட்டத்தில் இல்லை
திருப்பூர்: சென்னை வண்டலுார் பூங்காவில் பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதியானதால் இரண்டு நாட்களுக்கு பூங்கா மூடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கால்நடைத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மழைக்காலம் என்பதாலும் டெங்கு, ப்ளூ காய்ச்சல் பரவி வருவதாலும் கவனமாக இருக்க வேண்டும். மனிதர்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே நோய் வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை வெறும் கையில் எடுக்கக் கூடாது. பிளாஸ்டிக் அல்லது துணி பயன்படுத்தி பாதுகாப்பாக அகற்றி, பின் சோப்பு போட்டு கையை நன்றாக கழுவ வேண்டும். இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
பயம் வேண்டாம்
இதுகுறித்து மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் இளங்கோ கூறுகையில், ‘பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் நம் மாவட்டத்தில் இல்லை; பாதுகாப்பாக உள்ளது; பயப்பட தேவையில்லை. கோழிப்பண்ணைகளில் அதிகளவில் கால்நடைகள் திடீரென இறந்தால் நோய் புலனாய்வு பிரிவுக்கு 94866 44542 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து