உடல் நசுங்கி 48 வயது நபர் பலி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தட்டான்மலை பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன், 48.
நேற்று (அக்.,22) இரவு புலிப்பாக்கம் பழைய ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு நோக்கி ‘ஹீரோ ஸ்பிளண்டர்’ பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் பைக்கில் சென்ற நபர் திடீரென குறுக்கே சென்றதால், கோதண்டன் நிலை தடுமாறி சாலையின் நடுவே கீழே விழுந்தார். அப்போது, செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது ஏறி இறங்கியது. இதில் கோதண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு நகர போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement