இலக்கிய பயிற்சி பாசறை மாணவியர்களுக்கு சான்றிதழ்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த இளையோர் இலக்கிய பயிற்சி பாசறையில் பங்கேற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2026–27ஆம் ஆண்டிற்கான இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடந்தது. இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பல்வேறு தமிழ் தொடர்பான தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.

இதில், பங்கேற்ற மாணவியர்களுக்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அருட்செல்வி, கல்லுாரி முதல்வர் கலைமதி, கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement