சர்வதேச ஆராய்ச்சி தரவரிசை பட்டியல்: புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அசத்தல்
புதுச்சேரி: சர்வதேச அளவிலான புகழ்பெற்ற ஆராய்ச்சி தரவரிசை பட்டியல்களில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளனர்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் - எல்சேவியர் வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 பேராசிரியர்களும், சாய்ரேங்க் அமைப்பின் சிறந்த 5 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் 25 பேரும் இடம்பெற்று சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
சாய் ரேங்க் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரகாஷ் பாபு உட்பட, 25 பேர் இடம் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச தரவரிசையில் இடம் பிடித்து பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களுக்குத் துணைவேந்தர் பிரகாஷ் பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உயர்தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அறிவியல் கண்டுபிடிப்புகளை சமூக நலனுக்கான பயனுள்ள தீர்வுகளாக மாற்ற தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு