ராகுல் - பிரியங்கா இடையே மோதல்?: கண்காட்சி விவகாரத்தில் வம்பிழுக்கும் பா.ஜ.,
புதுடில்லி: 'டில்லியில், பிகானீர் ஹவுஸ் கலாசார மையத்தில், காங்., - பார்லி., குழு தலைவர் சோனியாவின் மகளும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்காவின் மகன் ரேஹான் வாத்ரா நடத்திய புகைப்படக் கண்காட்சியில் இருந்து, அரசியல் தொடர்பான படங்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மவுனமாக இருப்பது ஏன்?' என, பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது. இதன் மூலம், காங்கிரசில் ராகுல் - பிரியங்கா இடையே அதிகார மோதல் நீடிப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
தலைநகர் டில்லியில், இந்தியா கேட் பகுதி அருகே, 20ம் நுாற்றாண்டின் வரலாற்று சிறப்புமிக்க பிகானீர் ஹவுஸ் எனப்படும், மாளிகை உள்ளது. இது தற்போது, பொது கலை மற்றும் கலாசார மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
அகற்றம்:
இங்கு, 'நோ ஐடியா இஸ் பைனல்' என்ற தலைப்பில், இயற்கை, வனவிலங்குகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி நடத்த அனுமதி தரும்படி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் மருமகனும், அவரது சகோதரி பிரியங்காவின் மகனுமான ரேஹான் வாத்ரா, ஜூன் 10ல், பிகானீர் ஹவுஸ் நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். இதை பரிசீலித்த நிர்வாகம், ஜூன் 30ல் அனுமதி அளித்தது.
பிகானீர் ஹவுஸ் கலாசார மையத்தில், கடந்த 21ல், புகைப்படக் கண்காட்சி தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாக, தான் எடுத்த, 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை, ரேஹான் வாத்ரா அங்கு காட்சிப்படுத்தினார். அதில், 70 - 75 புகைப்படங்கள், சமீபத்தில், டில்லியில் நடந்த போராட்டங்களை மையப்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
அரசியல் தொடர்பான படங்களுக்கு அனுமதி கிடையாது என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி, போராட்டங்கள் குறித்த படங்களை ரேஹான் வாத்ரா காட்சிப்படுத்தியது, பிகானீர் ஹவுஸ் நிர்வாகத்தை அதிருப்தி அடையச் செய்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட படங்களை கண்காட்சியில் இருந்து அகற்றும்படி, ரேஹான் வாத்ராவுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, 70க்கும் மேற்பட்ட படங்கள் அகற்றப்பட்டன.
இதனால் அதிருப்தி அடைந்த ரேஹான் வாத்ரா, 'கண்காட்சிக்கான ஆவணங்களை முன்கூட்டியே சமர்ப்பித்திருந்தேன். ஒரு வாரமாக அமைதியாக இருந்த பிகானீர் ஹவுஸ் நிர்வாகம், கண்காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், புகைப்படங்களை அகற்றும்படி கூறுவது ஏன்?' என, கேள்வி எழுப்பினார்.
இதை திட்டவட்டமாக மறுத்த நிர்வாகம், 'இயற்கை, கலை, கலாசாரம் மற்றும் வனவிலங்குகளை மையமாக கொண்ட கண்காட்சியை நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அரசியல் பரப்புரை தொடர்பான படங்களுக்கு இங்கு இடமில்லை' என்றது.
கருத்து சுதந்திரம்:
இந்த விவகாரத்தில் தன் மகன் ரேஹான் வாத்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரியங்கா, இளைஞர்களின் கருத்து சுதந்திரத்தையும், அவர்களின் குரலையும் நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி நேற்று கூறியதாவது: பிகானீர் ஹவுஸ் நிர்வாகத்துக்கு ரேஹான் வாத்ரா அனுப்பிய விண்ணப்பத்தில், இயற்கை, வனவிலங்குகள், கலைப்படைப்புகள் மற்றும் சிற்பங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும் என, உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், அவரை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான குடும்ப அழுத்தத்தின் காரணமாக, டில்லியில் நடந்த போராட்டங்கள் தொடர்பான அரசியல் புகைப்படங்கள், கண்காட்சியில் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. அரசியல் பரப்புரைகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிந்தும், வேண்டுமென்றே இதை செய்துள்ளனர். கலாசார மையத்தின் கொள்கைகளுக்கு முரணாக இருந்ததால், அரசியல் தொடர்பான படங்களை அகற்றும்படி, கடந்த 21ல், பிகானீர் ஹவுஸ் நிர்வாகம் கூறியது. இதில் என்ன தவறு இருக்கிறது?
தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு சென்றுள்ள ராகுல், உலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னையை பற்றி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், தன் மருமகன் ரேஹான் வாத்ராவுக்கு ஆதரவாக இதுவரை ஒரு பதிவு கூட போடாமல் மவுனம் காக்கிறார். இதன் மூலம், காங்கிரசில் ராகுல் - பிரியங்கா இடையே அதிகார மோதல், உட்கட்சி பூசல் நீடிப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
வெளிநாட்டு வித்துக்கள் இந்தியாவிற்கு நன்மை செய்யாது மாறாக கெடுதலைத்தான் செய்யும்.
கலப்பின வித்துக்கள் கிருமிகளை உற்பத்தி செய்யும். இவைகள் முளையிலே அழிக்க வேண்டும்மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து